சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகள் என்றால் அழகாக இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை இருந்து வருகிறது எனவே அதற்கு ஏற்றார் போல் நடிகைகளும் டயட்டை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து பிரபல நடிகை டாப்ஸி கூறியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை டாப்ஸி பன்னு மாடலிங் துறையின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அதன் பிறகு மென்பொருள் நிபுணராக பணியாற்றி வந்த இவர் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த சும்மாண்டி நாதம் என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். மேலும் இதனை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
மேலும் இவருக்கு இந்த படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த பல தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்று வந்த இவர் இதனை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார். சமீப காலங்களாக தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய அதனால் பாலிவுட்டில் பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் டாப்ஸி அவர்கள் விளையாட்டு வீராங்கனை ஒருவரின் பயோபிக் படத்தில் நடித்து வருகிறார். இதற்காக கடுமையான உடற்பயிற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து ட்ரெண்டிங்காக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீப பேட்டி ஒன்றில் கலந்துக் கொண்ட இவர் டயட்டுக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கிறாராம்.
அது மட்டுமில்லாமல் இது குறித்து டாப்ஸி இந்த தகவல் என்னுடைய அப்பாவுக்கு தெரிந்தால் திட்டுவார். இதற்காக போய் இவ்வளவு செலவு பண்றியா? என கேட்பார். மேலும் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு போய் செலவு செய்வற்கு பதிலாக இப்படி டயட்டுக்குனு சம்பளமாக ஒதுக்குவதில் தப்பு ஒன்றும் இல்லை என்று டாப்ஸி கூறி இருக்கிறார்.