அலைபாயுதே திரைப்படத்தில் ஷாலினிக்கு அக்காவாக நடித்த நடிகையா இது..! கிளாமர் உடையில் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.?

swarnamalaiya

actress swarnamalaiya latest photos : தற்போது தொலைக்காட்சிகளில் புதுபுது  அழகழகான தொகுப்பாளினிகள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் இவர்களுக்கு முன்பாகவே 90 காலகட்டத்தில் மிக சிறந்த தொகுப்பாளினியாக வலம் வந்தவர் தான் சொர்ணமால்யா. இவருடைய நிகழ்ச்சி என்றாலே அது வேற லெவல் ஆகத்தான் இருக்கும்.

அந்த அளவிற்கு இவருடைய குரலுக்கும் அழகுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் இவர்  பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பான பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நீங்கள் கேட்ட பாடல் மற்றும் இளமை புதுமை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய நமது தொகுப்பாளினி ரசிகர்களில் கிராஷாக மாறி விட்டார். திரைப்படத்தை இவர் தொகுப்பாளினியாக வளர்ந்தது மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அந்தவகையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட திரைப்படமான அலைபாயுதே என்ற திரைப்படத்தில் கூட ஷாலினிக்கு அக்காவாக நடித்திருப்பார். இவ்வாறு இந்த திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிக சிறப்பாக இருந்தது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அண்ணா, மொழி போன்ற பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

பின்னர் அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிய நமது நடிகை வெகு நாட்களாக வாழ்க்கையை சிறப்பாக ஓட்டிக்கொண்டு வந்தார் பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இவர்களுடைய திருமணம் விவாகரத்தில் வந்து முடிந்து விட்டது.

இவ்வாறு பல்வேறு பிரச்சனையை சந்தித்த நமது நடிகை அதன்பிறகு திரைப்படத்தில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக  குறைத்ததன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது. பின்னர் பல வருடம் கழித்து பாரதிராஜாவின் தெக்கத்தி பொண்ணு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இந்த திரைப்படத்திலும் அவர்க்கு கொடுத்த கதாபாத்திரம் சரியாக அமையாததன் காரணமாக தற்போது சின்னத்திரைக்கு தள்ளபட்டு விட்டார் இந்நிலையில் அவர் சன் டிவியில் தங்கம் என்னும் சீரியலில்  நடித்து வந்தார்.  பொதுவாக சொர்ணமால்யா பரதநாட்டியத்தில் மிகச்சிறந்தவர் என்பது நமக்கு தெரிந்த விஷயம் இந்நிலையில் ஒரு பரத நாட்டிய பள்ளியை சென்னையில் நடத்தி வருகிறார்.

swarnamalaiya-1
swarnamalaiya-1

இது ஒரு பக்கம் இருக்க பருவமதில் நமது நடிகை எடுத்துக்கொண்ட போட்டோஷுட் புகைப்படம் ஆனது தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.