அப்பாவை விட காதலர் தான் முக்கியம் என்று இருக்கும் நடிகை சுருதிஹாசன்.! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..

sruthi hassan

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் நடிகர் கமலஹாசன் இவர் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரை ஏராளமான திரைப்படங்களில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இவர் தற்போது தமிழ் சினிமாவின் ஒரு அங்கமாக திகழ்ந்து வருகிறார் இவ்வாறு சினிமாவில் கொடிகட்டிப் பறந்து வரும் இவர் தற்பொழுது அரசியலிலும் இறங்கி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களை தொகுத்து வழங்கி வந்த இவர் ஐந்தாவது சீசனின் பாதியில் தொகுப்பாளராக பணியாற்றுவதை நிறுத்தினார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் நேற்று இத்திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்படிப்பட்ட நிலையில் பிரமாண்டமாக நடந்த இந்நிகழ்ச்சியில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், சிம்பு உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள் இவர்களை தொடர்ந்து கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசனும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் மூத்த மகள் நடிகை சுருதிஹாசன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஏனென்றால் சுருதிஹாசன் சமீப காலங்களாக ஒரு நபரை காதலித்து வருகிறார் என்பது நாம் அறிந்த ஒன்று தான் அவருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் லைவ் சேட்டில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் கொண்டிருக்கும் பொழுது கூட அவரை வைத்துக் கொண்டு தான் அனைத்திற்கும் பதில் அளித்து வருகிறார்.

sruthi hassan 1
sruthi hassan 1

இவ்வாறு தனது அப்பாவின் திரைப்படத்திற்கு வராமல் இருக்க என்ன காரணம் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் நேற்று இரவு சுருதிகாசன் சோகத்தில் இருப்பதுபோல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில் ஏன் சோகம் என்ன ஆச்சு உங்களுக்கு அப்பாவுக்கும் என்ன பிரச்சனை என்று கேட்டுள்ளார்கள்.  இவ்வாறு ரசிகர்கள் கேள்வி எழுப்ப மற்றொரு பக்கம் இவருக்கு அப்பாவைவிட காதலன் தான் முக்கியம் என்று கூறி வருகிறார்கள் இதனைப் பற்றி எந்த ஒரு தகவலையும் இதுவரையிலும் சுருதிஹாசன் கூறவில்லை.