சினிமாவில் சமீப காலங்களாக வாரிசு நடிகர் நடிகைகளின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. அதோடு தொடர்ந்து ஏராளமான நடிகர், நடிகைகள் அறிமுகமாகி வருகிறார்கள். சினிமாவின் உச்சத்தில் இருந்து வரும் முன்னணி நடிகர்-நடிகைகளின் வாரிசுகள் சினிமாவிற்கு அறிமுகமானாலும் அவர்களால் தொடர்ந்து சினிமாவில் ஜெயிக்க முடியும் என்பது கேள்விக் குறியான ஒன்று தான்.
ஒரு சில வாரிசு நடிகர் நடிகைகள் மட்டுமே தங்களால் முடிந்த வரை போராடி சினிமாவில் தங்களுக்கென ஒரு அங்கீகாரத்தை பிடித்து பிரபலமடைவார்கள் அந்த வகையில் தனது சிறந்த நடிப்புத் திறமையினால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை சுருதிஹாசன்.
கமலஹாசனின் மகளாக அறிமுகமான இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இந்நிலையில் சமீபத்தில் சுருதிஹாசன் மன நல மருத்துவரை சந்தித்துள்ளார் அதற்கான காரணம் கேட்டு ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் தொந்தரவு செய்து வருகிறார்கள்.
அதாவது சினிமாவிலும், அரசியலிலும் அதிக ஆர்வமுடையவராக கமலஹாசன் திகழ்கிறார். கமலஹாசன் சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்றும் தற்பொழுது உள்ள நடைமுறைகளை மாற்ற வேண்டும் என்றும் விரும்புகிறார். இப்படிப்பட்ட நிலையில் நடிகையும் பாடகி என பன்முகத் தன்மைகளை கொண்டுள்ள சுருதிஹாசன் தற்பொழுது கேஜிஎஃப் இயக்குனர் திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக சலார் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் திரைப்படத்திலும் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீப பேட்டி ஒன்றில் இவர் நாம் மனரீதியாக மிகவும் சிரமப்படுகிறோம் என்றும் என்ன பிரச்சனை என்றாலும் அனைவரிடமும் சொல்ல தயங்குகிறோம் என்றும் கூறினார்.
மேலும் உளவியல் படித்தவர் கல்லூரியை விட்டு விலகினாலும் உளவியல் நண்பர்களோடு அடிக்கடி பேசுவதாகவும் சினிமா எப்பொழுதும் அழுத்தம் தரக்கூடிய துறை என்றும் சமீப காலங்களாக நானும் மனநல மருத்துவர்களை சந்தித்து ஆலோசனைகளை கேட்பதுண்டு என்றும் கூறியுள்ளார். அவரவர் பிரச்சனைகளை வெளியில் சொன்னால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்றும் கூறினார்.