“கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் சூர்யா பட நடிகை.! அப்ப படம் ஹிட்..

dhanush-

நடிகர் தனுஷ் தொடர்ந்து வித்தியாசமான திரை கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் மாறன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் போன்ற படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார்.

இந்த ஒவ்வொரு திரைப்படமும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இந்த படங்கள் வெற்றி பெறும் பட்சத்தில் நடிகர் தனுஷின் சினிமா பயணம் மிகப் பெரிய ஒரு உச்சத்தை எட்டும் என தெரிய வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த திரைப்படங்கள் இருக்க ஹாலிவுட் இவர் நடித்த க்ரே மேன்  படமும் வெளிவர ரெடியாக இருக்கிறது.

இந்த படத்தில் கொஞ்ச நேரம் வந்தாலும்.. தனுஷ் அந்த கதாபாத்திரத்தில் மிரட்டி உள்ளார். குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் சும்மா நடிகர் ஜாக்கிஜான் போல பறந்து பறந்து சண்டை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனுஷுக்கு இப்போது இருக்கும் திரைப்படங்கள் ஒரு பக்கம் வெளிவர.. மறு பக்கம் நடிகர் தனுஷ் புதிய படங்களில் நடிக்க உள்ளார்.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாக உள்ள கேப்டன் மில்லர் என்னும் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்திய ஜோதி பிலிம்ஸ் முதலில் மூன்று நடிகைகளின் பெயரை சொல்லி அதில் யாரேனும் ஒருவரை தனுஷுக்கு ஜோடியாக நடிக்க வைக்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.

அந்த மூன்று நடிகைகள் வேறு யாரும் அல்ல.. கீர்த்தி ஷெட்டி, பிரியங்கா அருள் மோகன், கியாரா அத்வானி போன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது ஒரு வழியாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

priyanka arul mohan
priyanka arul mohan