Sunny Leone; பொதுவாக சினிமா பொருத்தவரை ஹீரோக்கள் அளவிற்கு ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கிடைப்பது இல்லை மேலும் சம்பள விஷயத்திலும் ஹீரோக்கள் தான் அதிக சம்பளம் பெற்று வருகின்றனர். அதில் இரண்டு பங்கும் மட்டுமே நடிகைகளுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது எனவே இது சினிமாவில் நடிகைகளுக்கு எதிராக நடக்கும் குற்றமாக பார்க்கப்படுகிறது
இதன் காரணத்தினால் ஹீரோயினாக நடித்து வேலைக்காகாது என கவர்ச்சியில் குதித்த பல நடிகைகள் இருக்கின்றனர். அந்த வகையில் கவர்ச்சி கனவு கன்னியாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை சன்னி லியோன். இந்நிலையில் கவர்ச்சிக் குயின் சன்னி லியோன் மொத்த சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் சன்னி லியோன் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து வருகிறார். இதன் மூலம் பிரபலமான நிலையில் இதனை அடுத்து ஹிந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். இந்நிகழ்ச்சிருக்கு பிறகு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான கிடைத்தது.
அப்படி சதீஷ், தர்ஷா குப்தா ஆகியோர்களின் நடிப்பில் வெளியான ‘ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படம் மோசமான விமர்சனத்தை பெற்றது. இவ்வாறு சன்னிலியோன் கவர்ச்சியாக நடித்து வருவதனால் ஏராளமான பிரபலங்கள் இவரை விமர்சனம் செய்து வருகிறார். அதற்கு பதிலடி கொடுத்து வருவதை சன்னி லியோன் வழக்கமாக வைத்திருக்கிறார்.
தற்பொழுது இவரது முழு சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இவருக்கு ரூபாய் 100 கோடிக்கும் மேல் சொத்து இருக்கிறதாம். மேலும் ஒரு படத்திற்காக ரூபாய் 1.2 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறாராம். இது மட்டுமல்லாமல் மும்பை போன்ற இன்னும் சில இடங்களில் அப்பார்ட்மெண்ட், பங்களா என நிறைய வைத்திருக்கிறாராம்.