actress sunaina latest photos: தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சுனைனா இவர் தமிழ் சினிமாவில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானார்.
இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக எளிதில் ரசிகர் மனதில் இடம்பிடித்தது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் பெற ஆரம்பித்தார் அந்த வகையில் சமர், மாசிலாமணி, வம்சம், யாதுமாகி, தெறி, காலி, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படம் நடித்து வரும் நடிகை சுனைனா என்னதான் திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டிக் கொண்டாலும் இதுவரை முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை மட்டும் பெற முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து சில்லு கருபட்டி என்ற திரைப்படத்தில் நடித்த சுனைனா இந்த திரைப்படத்தில் இவருக்கு கொடுத்த கதாபாத்திரம் ஆனது மிகவும் வித்தியாசமாக இருந்தது மட்டுமல்லாமல் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் அந்த திரைப்படம் அவருக்கு சொல்லும்படி வெற்றியை கொடுக்கவில்லை.
தற்போது எரியும் கண்ணாடி என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை சுனேனா விரைவில் நடிகர் கிருஷ்ணாவுடன் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கிருஷ்ணாவும் சுனைனாவும் வெகுநாளாக காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் ஆனால் இது பொய்யான தகவல் என மறுத்துள்ளார்கள்.
இந்நிலையில் நமது நடிகை தன்னுடைய 14 வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இதனை தொடர்ந்து தற்போது தன்னுடைய கிளாமர் புகைப்படம் சிலவற்றை சமூகவலைத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் லைக்குகளை குவித்து வருகிறது.