தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை சுனைனா. இவர் 2007 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சிவாஜி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். நடிகை சுனைனா இதனையடுத்து அவர் ஹீரோயினாக 2009ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
முதல் படத்திலேயே தனது திறமையை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்துக் கொண்டார். இதனையடுத்து அவர் திருத்தணி, வம்சம், மாசிலமணி, நீர்பறவை, சமர், நம்பியார் போன்ற படங்களில் மேலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
தமிழ் சினிமாவில் நிலைத்து நின்று விடலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவருக்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்தநிலையில் அவர் சினிமாவில் சில வருடங்கள் ஒதுங்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் ட்ரிப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மற்றும் எரியும் கண்ணாடி என அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் நடிகை சுனைனா அவர்கள் ட்ரிப் திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சுனைனாவை நாய் ஒன்று ஓடிவந்து கடிப்பதுபோல் இடம்பெறும் காட்சியை படமாக்கும்போது அந்த வீடியோ எடுக்கப்பட்டது. அத்தகைய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Yes, that is me with a pitbull for my next Tamil film, #TRIP . #BehindTheScenes @dennisfilmzone pic.twitter.com/1CSNasg9v1
— Sunainaa (@TheSunainaa) April 3, 2020