காலம் போன காலத்தில் கல்யாணமா.? 50 வயதில் பகீர் கிளப்பும் சுகன்யா..

Sukanya
Sukanya

Actress Sukanya: நடிகை சுகன்யா தனது மறுமணம் குறித்து சமீபத்தில் கூறி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் திரைவுலகில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சுகன்யா பாரதிராஜாவின் புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

குறுகிய காலத்திலேயே சினிமாவில் பிரபலமடைந்த இவருக்கு விஜயகாந்தின் சின்ன கவுண்டர், கமலஹாசனின் இந்தியன், சத்யராஜின் வால்டர் வெற்றிவேல் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று அசுர வளர்ச்சி அடைந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த 2002ஆம் ஆண்டு ஸ்ரீதரன் அவரை சுகன்யா திருமணம் செய்து கொண்ட நிலையில் தனது கணவருடன் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்தார். இவர்களுடைய திருமணமும் அமெரிக்காவில் தான் நடைபெற்றது  திருமணம் நடைபெற்ற ஒரு ஆண்டு மட்டுமே தனது கணவருடன் சுகன்யா சேர்ந்து வாழ்ந்தார் பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தார்.

தனது விவாகரத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க ஆர்வம் காண்பித்த சுகன்யாவிற்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை இந்நிலையில் சில திரைப்படங்கள் மட்டுமே நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக திருமணம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவ்வாறு விவாகரத்திற்கு பிறகு 20 ஆண்டுகளாக சிங்கிளாகவே வாழ்ந்து வரும் நடிகை சுகன்யாவிற்கு தற்போது 50 வயது ஆகும் நிலையில் நடிகர் சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில் தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்தும் பேசி உள்ளார்.

மறுமணம் பற்றி சுகன்யாவிடம் கேட்க இதற்கு பதில் அளித்த இவர், இதுவரை அப்படி ஒரு எண்ணம் எனக்கில்லை, எனக்கு இப்போ 50 வயது ஆகிறது. இனிமேல் கல்யாணம, குழந்தை வந்தா அந்த குழந்தை என்னை அம்மான்னு கூப்பிடும்மா, இல்ல பாட்டின்னு கூப்பிடமானு நானே யோசிப்பேன் நான் மறுமணம் வேண்டாம்னு சொல்லல என்றும் தனது முதல் கணவருடன் நீதிமன்றத்தில் விவாகரத்து கிடைப்பதற்கு பல வருடங்கள் ஆனதாகவும் தெரிவித்துள்ளார்.