தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். பொதுவாக இவர் இளமை காலகட்டத்தில் இருந்த பொழுதும் தற்பொழுது வயதானாலும் இவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என முன்னணி நடிகைகள் முதல் இளம் நடிகைகள் வரை பலரும் ஆசைப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகை குஷ்பு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வந்த பொழுது இவருக்கு போட்டியாக இருந்த பிரபல நடிகைக்கு கடைசிவரையிலும் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இவ்வாறு கிடைத்த வாய்ப்பையும் தவறவிட்டிருக்கும் நிலையில் இதுகுறித்து பிரபல நடிகை பேட்டி அளித்துள்ளார்.
அதாவது கமலஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்தி உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் தான் நடிகை சுகன்யா. இருக்கு நல்ல மார்க்கெட் இருந்த நிலையில் அந்த சமயத்தில் நடிகை குஷ்பூவுக்கு போட்டியாக இருந்து வந்துள்ளார்.
அந்த வகையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஓய்வில்லாமல் சினிமாவில் நடித்து வந்த சுகன்யாவிற்கு ரஜினியுடன் ஒரு படத்தில் கூட நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் சமீப பேட்டியில் சுகன்யா தனக்கு ஒரு படத்தில் கூட ரஜினிவுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதாவது அவர் கூறுகையில், நான் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒருமுறை ஏர்போர்ட் செல்லும் பொழுது இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரை தொடர்ச்சியாக நான் சந்தித்தேன் அப்பொழுது ரஜினி உடன் ஏன் நடிக்க மாட்டேன் என்று சொன்னீர்கள் என்று கேட்டுள்ளார்.
அதை கேட்டவுடன் நான் அதிர்ச்சியாகிவிட்டேன் அதாவது முத்து படத்தில் மீனா கதாபாத்திரத்தில் முதலில் சுகன்யா நடித்து வந்துள்ளார். ஆனால் யாரோ ஒருவர் ரஜினியிடம் சுகன்யாவுக்கு ரஜினி உடன் ஜோடி போட சுகன்யாவிற்கு விருப்பமில்லை என்று கூறியதாக தெரிவித்துள்ளார்கள் எனக்கு தெரியாமலே அந்த பட வாய்ப்பு தவற விட்டதாக சுகன்யா கூறியுள்ளார்