தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை சுருதிஹாசன் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் முதல் படத்திலேயே சூர்யாவுடன் ஹீரோயினாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார்.
அப்பாவை போலவே மகளும் தனது முதல் படத்திலேயே திறமையை வெளிக்காட்டி தமிழ் சினிமாவில் வலம் வருவார் என ரசிகர்களின் மனதில் எண்ணத்தை உருவாக்கினார் அதுமட்டுமல்லாமல் அப்பாவை போலவே இவரும் பன்முகத் தன்மை கொண்டவராக விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடனம், நடிப்பு, பாட்டு பாடுவது என அனைத்து துறைகளிலும் தனது திறமையை வெளிக் காட்டி வருகிறார் ஸ்ருதிஹாசன் இவர் தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் தனது திறமையை வெளிக்காட்டி பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.ஸ்ருதிஹாசன் அவர்கள் முக்கத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தேடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர் விஜய் சேதுபதியுடன் லாபம் என்ற திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்பொழுது வீட்டிலேயே முடங்கி உள்ள சுருதிஹாசன் போரடிக்காமல் இருக்க லைவ் சாட்டிங்கில் பாட்டு பாடுவது கீபோர்டு வாசிப்பது என நேரத்தை கழித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் அவ்வபொழுது புகைப்படங்களையும் வெளியிட்டு வந்த அம்மணி தற்போது விதவிதமான ரியாக்ஷன் கொடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் காமெடியாக இருப்பதாகவும் சிலர் சூப்பராக இருப்பதாகவும் கூறி வருகின்றனர் இருப்பினும் நெட்டிசன்கள் ரியாக்சன் மூலம் வடிவேலுக்கு போட்டியாக தற்போது ஸ்ருதிஹாசன் இறங்கி உள்ளார் என எனக்கூறி கலாய்த்து வருகின்றனர்.