தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சுருதிஹாசன். இவர் தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் வக்கீல் சாஹேப் மற்றும் சலார் ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார்.
சுருதிகாசன் தன் பிறந்தநாளின் போது டூடுல் கலைஞரான சாந்தனு என்பவரை காதலிப்பதாக தகவல் வெளிவந்தது. சுருதிஹாசன் தன் பிறந்த நாளின் போது தன் காதலருடன் இணைந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.
இதனைத் தொடர்ந்து தற்போது முதன்முறையாக தன் காதலருடன் சென்னை வந்துள்ளார். சென்னைக்கு வந்த பிறகு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ளார்.
அதில் ஏதோ துணி கடையில் இருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் போல் தெரிகிறது. அப்புகைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் நெருங்கிய தோழியான டிசைனர் அமிர்தா மற்றும் தன் காதலர் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் சுருதிஹாசன் விரைவில் தன் காதலரை கரம் பிடிப்பாரா என்று சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.