கேஜிஎஃப் படப்பிடிப்பில் யாஷ் தவறாக நடந்து கொண்டாரா.? விளக்கம் அளித்த ஸ்ரீநிதி ஷெட்டி..

kgf
kgf

கேஜிஎஃப் படப்பிடிப்பின் பொழுது நடிகர் யாஷ் நடிகை ஸ்ரீ நிதியிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்த நிலையில் தற்போது நடிகை ஸ்ரீதேவி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து யாஷ் பற்றிய உண்மை தகவலை கூறியுள்ளார். கன்னட சினிமாவில் ராக்கிங் ஸ்டார்ராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் யாஷ் கேஜிஎஃப் படத்தின் மூலம் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்து வருகிறார்.

இவ்வாறு கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் சாதனையை பெற்ற திரைப்படமாக கேஜிஎஃப் படம் விளங்கி வருகிறது. இவ்வாறு இதனை அடுத்து கே ஜி எஃப் 2 வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் இந்த படத்தில் யாஷ்க்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி செட்டி நடித்து இருந்தார். இந்த படத்தினை பிரசாந்த் நில் இயக்கியிருந்த நிலையில் ரவி பஸ்ரூர் இசையமைக்க, பவுன் கௌடா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

இவ்வாறு கேஜிஎஃப் 2 படம் மிகப் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் இந்த படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் உருவாகும் என தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள். இவ்வாறு இந்த படத்தின் மூலம் இளசுகளின் மனதை கொள்ளையடித்தவர் தான் நடிகை ஸ்ரீநிதி செட்டி.

இவர் மாடல் அழகி போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இதன் மூலம் கேஜிஎப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு கேஜிஎப் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர் இதனை தொடர்ந்து தமிழில் விக்ரமுடன் இணைந்து கோப்ரா என்ற படத்தில் நடித்திருந்தார் இவ்வாறு இதனை தொடர்ந்து இன்னும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கேஜிஎப் படப்பிடிப்பில் ஸ்ரீநிதி செட்டியிடம் யாஷ் தவறாக நடந்து கொண்டு தொல்லை செய்திருக்கிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் பலரும் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வந்தனர் இதனால் சர்ச்சை கிளம்பிய நிலையில் தற்போது இந்த வதந்திகளுக்கு நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் கொடுத்துள்ளார்.

அவர் கூறுகையில் சிலர் தேவையில்லாமல் சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றார்கள். கேஜிஎஃப் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் யார் ஷோவுடன் பணியாற்றுவது உண்மையிலேயே நான் செய்த ஒரு பாக்கியம். அவர் ஒரு ஜென்டில்மேன், சிறந்த வழிகாட்டி, படப்பிடிப்பில் யஷ்வுடன் நடிக்கும் பொழுது எனக்கு எந்த ஒரு பிரச்சனையும், தொல்லையும், ஏற்படவில்லை. அவருடன் இணைந்து நடித்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது நான் எப்பொழுதுமே யாஷுடைய ரசிகையாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.