Actress Sri Divya sad about acting with karthi: நடிகைகளை பொறுத்தவரை சினிமாவில் தொடர்ந்து நடித்து வரவேண்டும் என்றால் நடித்தால் மட்டும் போதாது கவர்ச்சியும் முக்கியமாக உள்ளது. அப்படி ஒரு சில நடிகைகள் என்ன ஆனாலும் பரவாயில்லை நான் கவர்ச்சி காமிக்க முடியாது என பிடிவாதமாக உள்ளனர் இந்த லிஸ்டில் ஒருவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யா.
சில திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஸ்ரீதிவ்யா ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகினார். தற்பொழுது தனக்கு கிடைக்கும் சில பட வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இந்த சூழலில் கார்த்திவுடன் நடிக்க தயங்கும் இவருடைய விசித்திரமான காரணம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அஜித், தனுசுக்கு no சொல்லிவிட்டு சூர்யா என்றவுடன் கிரீன் சிக்னல் கொடுத்த பிரபல நடிகை..
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான ஸ்ரீதிவ்யா இதனை தொடர்ந்து காக்கி சட்டை, ஜீவா, ஈட்டி, மருது உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். சில வருடங்களாக ஸ்ரீ திவ்யா படங்களில் நடிக்கவில்லை இந்நிலையில் நடிகர் கார்த்தியின் 27வது 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்குகிறார்.
ஸ்ரீதிவ்யா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது கார்த்தி 27வது படத்தில் கார்த்தியின் தங்கையாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கதாபாத்திரத்திற்கு கதாநாயகியை விட ஸ்ரீ திவ்யா கதாபாத்திரத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் இருப்பதாக கூறப்படுகிறது.
திரையுலகில் எந்த நடிகையும் செய்யாததை செய்து காட்டி அதிர்ச்சி கொடுத்த நடிகை..
என்னதான் முக்கியமான கேரக்டராக இருந்தாலும் ஸ்ரீதிவ்யாவிற்கு ஒரு மன வருத்தம் மட்டும் இருக்கிறதாம். அதாவது கார்த்தியுடன் சேர்ந்து இதற்கு முன்பு காஷ்மோரா படத்தில் நடித்திருந்தார். அதிலும் கார்த்திக்கு ஸ்ரீதிவ்யா ஜோடி கிடையாது அந்த படத்திலும் சரி இந்த படத்திலும் சரி இரண்டிலும் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க முடியவில்லை என தனது நெருங்கிய தோழிகளிடம் புலம்பி வருகிறாராம் ஸ்ரீதிவ்யா.