பொதுவாக சினிமாவில் முன்னணி நடிகையாக ஒருவர் வலம் வருகிறார் என்றால் அவரால் தொடர்ந்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க முடியாது கொஞ்சம் கவர்ச்சியாக நடித்தால் மட்டுமே அவர்களால் தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடியும் அந்த வகையில் நடிக்காமல் குடும்பப் பெண்ணாக மட்டுமே நடிப்பேன் என்று கூறி பிறகு திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பை பெறாமல் இருந்து வந்தவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யா.
இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். தனது முதல் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த இவருக்கு தொடர்ந்து காக்கி சட்டை, ஜீவா, மருது என பல இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
பிறகு திடீரென்று ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத காரணத்தினால் திரைப்படங்களை நடிப்பதை சில வருடங்களாக ஒதுக்கி வைத்திருந்தார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக 2017ஆம் ஆண்டு ஜீவாவுக்கு ஜோடியாக வெளிவந்த சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற திரைப்படம் வெளியானது.
இவ்வாறு சுமார் ஐந்து வருடங்கள் கழித்து ஸ்ரீபிரியா நடித்திருந்த திரைப்படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. ஆம், மலையாளத்தில் ஜனகணமன என்ற படத்தில் நடித்துள்ளார் இவர் திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவிற்கு முதன் முறையாக அறிமுகமாகி இருக்கிறார் நாளை இந்த திரைப்படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது.
இத்திரைப்படத்தில் கதாநாயகனாக பிரித்விராஜ் நடித்துள்ளார் இவரை தொடர்ந்து ஜோஸ் ஆண்டனி என்பவர் இயக்கியுள்ளார். பிறகு சுராஜ், வெஞ்சரமூடு, மம்தா மோகன்தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.