பொதுவாக சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல நட்சத்திரங்கள் இன்று சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பல நட்சத்திரங்களை கூறிக் கொண்டு செல்லலாம் அப்படிதான் தெலுங்கு சினிமாவில் 2000 ஆண்டு வெளியாகிய ஹனுமான் ஜாங்சன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல தெலுங்கு திரைப்படத்தில் நடித்த வந்தவர் ஸ்ரீதிவ்யா.
தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த பல நடிகைகளை தமிழ் சினிமா புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது அந்த வகையில் பல நடிகைகளை உதாரணத்திற்கு கூறலாம். அந்த வகையில் நடிகை ஸ்ரீதிவ்யா மனசார என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் அதன் பிறகு தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கொள்ளை அடித்தார்.
இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு மற்றும் ரியாக்ஷன் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது அதுமட்டுமில்லாமல் இலசுகளை காதல் வலையில் வீழ்த்தினார். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஊதா கலர் ரிப்பன் என்ற பாடல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தது இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஸ்ரீதிவ்யா ஜீவா, வெள்ளக்கார துரை, காக்கி சட்டை, ஈட்டி, பென்சில், மருது, காஷ்மோரா, சங்கிலி புங்கிலி கதவ தொற என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
தொடர்ந்து நடித்து வந்த இவர் பிரபலம் ஒருவர் பார்ட்டி கொடுத்தால் அதில் மூச்சு முட்ட குடித்துவிட்டு போடாத ஆட்டம் போட்டு விட்டார் அது மட்டும் இல்லாமல் தனக்கு இருந்த பெயரை மொத்தமாக கெடுத்துக் கொண்டார் என பிரபல சினிமா விமர்சகர் ஒருவர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.அதன் பிறகு இவருக்கு பெரிதாக பட வாய்ப்புஅமையவில்லை.
இந்த நிலையில் கடந்த ஐந்து வருடங்களாக தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையாமல் இருந்து வந்தார் இந்த நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் பிருத்திவிராஜ் சுகுமாரன் நடிப்பில் ஜனகணமன என்ற திரைப்படத்தில் மீண்டும் ரீ என்றி கொடுத்தார் தற்பொழுது தமிழில் ரைட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள ஸ்ரீதிவ்யா சொந்த ஊரிலேயே செட்டில் ஆகிவிட்டார் என தகவல் கிடைத்துள்ளது.
வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் அடிக்கடி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவார் அந்த வகையில் தன்னுடைய வீட்டில் எடுக்கப்பட்ட செல்பி மிரர் என்ற புகைப்படத்தை தற்பொழுது வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் எப்பொழுது மீண்டும் நடிக்க வருவீங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள்.