நடிகை ஸ்ரீதிவ்யா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வந்தவர் இவர் தெலுங்கில் முதன் முதலாக 2010ஆம் ஆண்டு ரவி பாபு இயக்கிய மனசார எனும் தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
ஆனால் அந்த திரைப்படம் தோல்வியை தழுவியது அதன்பிறகு ஸ்ரீ திவ்யா 2012ஆம் ஆண்டு மாருதி இயக்கிய பஸ் ஸ்டாப் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது அதன்பிறகு தமிழில் முதன்முதலாக 2013ஆம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் லதா பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதில் குடி போனார்.
அதன் பிறகு தமிழில் இவருக்கு பல பட வாய்ப்புகள் அமைந்தது ஜீவா வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில், மருது என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
ஆனால் ஒரு காலகட்டத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கு பெரிதாக பட வாய்ப்பு அமையவில்லை ஏனென்றால் ஸ்ரீதிவ்யா பெரிதாக மாடர்ன் உடை அணிந்தும், கவர்ச்சி காட்டியும் நடித்தது இல்லை அதனால் தான் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.
கடைசியாக ஸ்ரீதிவ்யா ஜீவாவுடன் சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் அடுத்த ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படகிறது.
அந்தவகையில் அதர்வா நடிக்கும் ஒத்தைக்கு ஒத்த என்ற திரைப்படத்திலும் கௌதம் கார்த்திக் நடிக்கும் பெயரிடப்படாத படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தைப் பெற்று விட வேண்டும் என அடிக்கடி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் மொட்டை மாடியில் டாப் ஆங்கிளில் நாக்கை நீட்டி குறும்புத்தனமான போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.