என்னது, சோனியா அகர்வாலுக்கு இரண்டாவது திருமணமா.? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..

soniya-agarwal

பொதுவாக நடிகைகளை பொருத்தவரை சினிமாவில் அவர்களுடைய இளமை குறைவு வரை மட்டும்தான் அவர்களுக்கு தொடர்ந்து முன்னணி நடிகையாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களுக்கு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் மட்டுமே நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.இதன் காரணமாக ஏராளமான நடிகைகள் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு குறைய தொடங்கியதும் சினிமாவில் விட்டு விலகி விடுகிறார்கள்.

மேலும்இன்னும் சில நடிகைகள் பணக்கார ஒருவரை பார்த்து திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுகின்றனர். அந்த வகையில் ஒருவர்தான் நடிகை சோனியா அகர்வால் இவர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுக்கோட்டை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் விஜய் உடன் இணைந்து மதுர என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திய இவர் சில காரணங்களினால் விவாகரத்து பெற்று பிரிந்தார் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இப்படிப்பட்ட நிலையில் செல்வராகவன் கீதாஞ்சலியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

மேலும் தற்பொழுது சோனியா அகர்வால் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். மேலும் சின்னத்திரையில் சில சீரியல்களிலும் நடித்து வந்தார்.பிறகு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சூட்டிங் புகைப்படங்கள், குடும்பத்துடன் செலவழிக்கும் புகைப்படங்கள் மற்றும் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

soniya agarwal
soniya agarwal

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் கையில் மெஹந்தி வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் இதனை பார்த்த ரசிகர் ஒருவர் சோனியாவிடம் உங்களுக்கு திருமணமா.? என கேள்வி எழுப்பி இருந்தார் உடனே அதற்கு பதில் அளித்த சோனியா சிரித்தபடியே ஏன் உங்களுக்கு மட்டும் தான் நடக்கணுமா என கேட்டு என்னுடைய திருமணம் மெஹந்தி இவ்வளவு சிம்பிளாக இருக்காது என கூறியுள்ளார் அதன் பிறகு தான் சோனியாக அகர்வாலுக்கு இரண்டாவது திருமணம் இல்லை என ரசிகர்கள் தெரிந்துக் கொண்டார்கள்.