ஒரே பெயர் வைத்தது குத்தமா..?ஆத்திரத்துடன் நடிகை சோனியா அகர்வால் வெளியிட்ட ட்விட்..!

soniya-agarwal-3
soniya-agarwal-3

தமிழ் சினிமாவில் 7ஜி ரெயின்போ காலனி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நடிகை சோனியா அகர்வால் அதன் பிறகு செல்வராகவன் இயக்கும் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.  இவ்வாறு அவர் இயக்கத்தில் தொடர்ந்து நடத்ததன் மூலமாக அவர் மீது காதல் ஏற்பட்டு பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

பொதுவாக சினிமாவில் காதல் திருமணம் ஏற்படுவதும் பின்னர் விவாகரத்தில் முடிவது வழக்கம் தான் அந்த வகையில் சோனியா அகர்வாலுக்கும் செல்வராகவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்களுடைய திருமணம் விவாகரத்தில் முடிந்து விட்டது.

அதன் பிறகு சோனியா அகர்வாலுக்கு சொல்லும்படி சிறப்பான பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை இதன் காரணமாக சின்னத்திரையிலும் ஒரு சில திரைப் படங்களில் குத்துப்பாடலுக்கு நடனம் ஆடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில் தற்போது பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு தன்னுடைய அழகை மேலும் அழகாக்கி கொண்டு புதிய பொலிவுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் கன்னட நடிகை சோனியா அகர்வால் வீட்டில் சுமார் 40 கிலோ கஞ்சா இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் மூலம் அதனை பறிமுதல் செய்து உள்ளார்கள்.  இந்நிலையில் நமது நடிகை சோனியா அகர்வால் கன்னட நடிகை சோனியா அகர்வாளும் ஒரே பெயர் கொண்டதன் காரணமாக அனைவரும் செல்வராகவன் முதல் மனைவியா இப்படி செய்தது என ஆச்சரியத்தில் இருந்தார்கள்.

soniya agarwal-2
soniya agarwal-2

இதன் காரணமாக பல்வேறு தரப்பினராலும் சோனியா அகர்வாலை கண்டமேனிக்கு சமூக வலைதள பக்கத்தில் பேசியதன் காரணமாக அவர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டார்.  அதுமட்டுமில்லாமல் அவருடைய குடும்பத்தாருக்கும் பல்வேறு ராங் நம்பர் களிலிருந்து போன் கால் வந்து கொண்டே இருந்தன.

soniya agarwal-1
soniya agarwal-1

ஆனால் உண்மையில் சிக்கியது கன்னட நடிகை தான் ஆனால் அது தெரியாமல் நமது ரசிகர்கள் இவ்வாறு நடந்து கொண்டது மிகவும் தவறான செயல் இதன் காரணமாக தன் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என சோனியா அகர்வால் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.