தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் சோனியா அகர்வால்.! உடல் எடையை குறைத்து இப்போ ஆளே மாறிட்டாங்களே.. புகைப்படத்தை பார்த்து ஆச்சரியப்படும் ரசிகர்கள்.

sonia agarwal
sonia agarwal

சினிமாவுலகில் மாடலிங் துறையில் இருப்பவர்கள் வெற்றிக்கொடியை நாடுகிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் அதை பல வருடங்களுக்கு முன்பே செய்து காட்டியவர் நடிகை சோனியா அகர்வால். இவரும் மாடலிங் துறையில் பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆரம்பத்திலேயே சினிமா உலகில் பெரிதும் கவர்ச்சியை காட்டி உலா வந்தவர் சோனியா அகர்வால்.

காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் தமிழில் நடித்து அறிமுகமானார். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததன் காரணமாக பட வாய்ப்புகள் குவிந்தன அந்த வகையில் கோவில், மதுர, நான் அவன் இல்லை என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தார். இப்படி சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் தனுஷின் அண்ணன் இயக்குனர் செல்வராகவன் உடன் காதல் வயப்பட்டு பின் 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

நான்கு வருடங்கள் இவரது வாழ்க்கை சிறப்பாக ஓடிக் கொண்டிருந்த நிலையில் 2010ஆம் ஆண்டு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்தனர் அதன்பின் நடிகை சோனியா அகர்வால் தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்துவிதமான மொழிகளிலும் நடித்து அசத்தினார் இப்படி ஓடிக் கண்டிருந்த இவருக்கும் எப்படியோ குடிப்பழக்கம் தொற்றிக் கொண்டது.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்பையே விட்டுவிட்டு அதிலேயே மூழ்கினார் இதனால் மீடியா உலகம் அவரை தள்ளி வைத்து. மேலும் தாறுமாறாக உடல் எடையையும் ஏற்றுக்கொண்டதால் ஒரு சமயத்தில் இருக்கிறாரா இல்லையா என்ற சூழல் நிலவியது தற்போது 35 வயதாகும் சோனியா அகர்வால் மீண்டும் சினிமா வாய்ப்பை கைப்பற்ற அதிரடியாக தனது உடலை குறைத்து மீண்டும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

தற்போது அனிதா சம்பத்,சத்யராஜ் ஆகியோர் நடிக்கும் ஒரு புதிய படத்தில் சோனியா அகர்வால் நடிகை இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் உடல் எடையை குறைத்து இருக்கும் புகைப்படத்தை இவர் வெளியிட்டுள்ளார் இதோ நீங்களே பாருங்கள் சோனியா அகர்வால் தற்போதைய புகைப்படத்தை..

sonia agarwal
sonia agarwal
sonia agarwal
sonia agarwal