என்னுடைய ஆசை நடக்காமல் போனதற்கு காரணம் செல்வராகவன் குடும்பம் தான்.. புயலைக் கிளப்பும் சோனியா அகர்வால்

sonia agarwal
sonia agarwal

Actress Sonia Agarwal: நடிகை சோனியா அகர்வால் செல்வராகவனை திருமணம் செய்த பிறகு தான் என்னால் படங்களில் நடிக்க முடியவில்லை என அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் அவர் கூறிய சில விஷயங்கள் ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.

நடிகை சோனியா அகர்வால் கடந்த 2006ஆம் ஆண்டு செல்வராகவனை திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இருவரும் சில வருடங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்து வந்தனர். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். இதனை அடுத்து வெப் சீரியல்களிலும் மற்றும் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே சோனியாக அகர்வால் நடித்து வருகிறார்.

அப்படி தற்பொழுது 7/G என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டரை இன்று சோனியா அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்த இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் இயக்குனர் செல்வராகவன் மிகவும் அமைதியான, பிஸியான நபர்.

அவருடைய எழுத்தால் அவருக்கான சொந்த உலகில் இருப்பார். அது ஒரு நல்ல உறவாக இருந்தது ஆனால் பிறகு ஏற்பட்ட பிரச்சனைகளை பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை பிரிவு காரணமாக ஏன் என்று எனக்கு அவருக்கும் தெரியும் நாங்கள் பிரிந்து செல்ல முடிவெடுத்தோம். அதற்குப் பிறகு அவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தார், நானும் என்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

ஒன்றாக இருந்தவர்கள் எப்படி பிரிந்து பிறகு நண்பர்களாக மாறுகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. அது சாத்தியம் இல்லை என்று நான் நினைக்கிறேன், என்னால் அப்படியெல்லாம் வாழ முடியாது ஒருவேளை ஒரு சிலரால் அப்படி நண்பர்களாக வாழ முடியுமாக கூட இருக்கலாம். பிடிக்கவில்லை என்பதற்காக எதிரியாக மாறுவது என்ற அர்த்தம் இல்லை அதுபோல திருமணம் ஆனால் என்னுடைய தொழில் எதிர்பார்த்தபடி உயரவில்லை திருமணத்திற்கு பிறகு நான் நடிக்கவில்லை என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்தது.

செல்வாவின் குடும்பத்தினரோ நான் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் தான் நான் நடிப்பதை விட்டு விலகினேன் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து செல்வாவிடம் நடிப்பு பற்றி கேட்டுக் கொண்டிருந்தேன் அந்த சமயத்தில் தான் ஒருமுறை குஷ்பு உங்களால் சீரியல்களில் நடிக்க முடியுமா என்று கேட்டார் அப்படித்தான் நான் மெல்ல மெல்ல மீண்டும் நடிக்க வந்தேன் என்று இந்த பேட்டியில் கூறியுள்ளார்.