90 காலகட்டத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து பிசியாக ஓடியவர் நடிகை ஷோபனா.. இவர் தமிழில் “எனக்குள் ஒருவன்” என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து வாத்தியார் வீட்டு பிள்ளை, தளபதி, இது நம்ம ஆளு, சிவா என பல படங்களில் நடித்தார். திரை உலகில் வெற்றியை மட்டுமே கண்டு வந்த ஷோபனா..
நடன கலையில் ரொம்பவும் தேர்ச்சி பெற்றவர் தற்போது படங்களில் நடிப்பதையும் தாண்டி நடன கலைஞராக விஸ்வரூபம் எடுத்து பலருக்கும் கலையை கற்றுத் தந்து வருகிறார் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதில் அவர் சொன்னது..
ரஜினியுடன் சிவா படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ஷோபனா சொன்னது.. சிவா படத்திற்காக மழையில் ரஜினி சாருடன் நடனம் ஆடுவது போல ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது.. இரு விழியின் வழியே எனத் தொடங்கும் அந்த பாடலில் வெள்ளை சேலையில் ஆட வேண்டியது இருந்ததாம் அந்த சேலை ரொம்ப ட்ரான்ஸ்பரண்டாக இருந்ததால் இதை எப்படி கட்டுவது என குழப்பத்தில் இருந்ததாக கூறினார். முக்கியமாக உள்ளே போடவும் அவரிடம் எதுவுமே இல்லையாம் வீட்டிற்கும் சென்று துணிகள் எடுத்து வர முடியாது ..
என்பதால் ஏவிஎம் ஸ்டுடியோவில் இருந்த பிளாஸ்டிக் டேபிள் கிளாத்தை கட்டிக் கொண்டதாக கூறியுள்ளார் மேலும் மழையில் எடுக்கப்பட்ட ஒரு காட்சியில் ரஜினி சார் அவரை கட்டிப்பிடிப்பது போல காட்சி இருந்தது அப்பொழுது ஷோபனா உள்ளே போட்டிருந்த பிளாஸ்டிக்கில் இருந்து சடசடவென சத்தம் வந்துள்ளது ஆனால் ரஜினி சாருக்கு அந்த சத்தம் எங்கிருந்து வந்தது என தெரியவில்லை அப்பொழுது அவரது முகத்தில் வந்த ரியாக்ஷனை இப்பொழுது நினைத்தாலும் மறக்கவே முடியவில்லை என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் அதன்பின் ரஜினி அதை கண்டுபிடித்து விட்டதாகவும் இருப்பினும் அவர் வெளியே சொல்லவில்லை இன்று வரை இந்த சம்பவம் ஏவிஎம் நிறுவனத்திற்கும் தெரியாது என கூறியுள்ளார் மேலும் இது நம்ம ஆளு படம் பண்ணும் பொழுது நான் ஆடிய நடனங்கள் எனக்கு கவர்ச்சியாக தெரியவில்லை ஆனால் அது அப்பொழுது கவர்ச்சியாக இருந்ததாக பலரும் விமர்சித்தனர் என கூறினார்.