பழனி முருகனை சந்திக்க குடும்பத்துடன் சென்ற நடிகை சினேகா..!இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

sneha-2

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை சினேகா இவர் சினிமாவில் நடித்த காலகட்டத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து பல்வேறு ரசிக பெருமக்களை கவர்ந்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் தனுஷ் விஜய் சூர்யா என பலருடனும் திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்தது மட்டுமில்லாமல் இவர் நடித்த ஒவ்வொரு திரைப்படங்களும் ஒரு வெற்றி திரைப்படமாகவே அமைந்தது.

அந்த வகையில் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படத்திற்கு கதாநாயகியாக நடிக்க இயக்குனர்கள் தேர்வு செய்யும் ஒரு நடிகை என்றால் அது சினேகா தான் இவரை ரசிகர்கள் பலரும் புன்னகை அரசி என்று அழைப்பார்கள் ஏனெனில் இவர் சிரிப்புக்கு மயங்காத ரசிகர்களே கிடையாது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தான் சினிமாவில் பிரபலமாக இருக்கும் பொழுது நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு திருமணத்திற்கு பிறகு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தையை பெற்றெடுத்த நமது சினேகா இன்றும் சினிமாவில் சில திரைப்படங்களில் மூலம் மாஸ் காட்டி வருகிறார்.

இந்நிலையில் நடிகை சினேகா தன்னுடைய குடும்பத்துடன் பழனி மலை கோவிலுக்கு சாமி தரிசனம் வாங்குவதற்காக சென்றுள்ளார். அங்கு கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்த ஒரே காரணத்தினால் கோயில் வளாகத்திலேயே சற்று நேரம் சினேகா அமர்ந்துள்ளார்.

பின்னர் வெகு நேரமாக காத்திருந்த நடிகை சினேகா அதன் பிறகு சுவாமி தரிசனம் பெற்றுள்ளார் அப்பொழுது அவரை சூழ்ந்து நின்ற ரசிகர் பெருமக்கள் உடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ.

sneha-2
sneha-2