Actor Vijay: விஜய்யின் புதிய திரைப்படத்தில் நடிகை சினேகா அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. கோலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் விஜய் தொடர்ந்து சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அவருடைய நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற விரைவில் வெளியாக இருக்கிறது. எனவே இதனை தொடர்ந்து விஜய் தனது 68வது படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்கு தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முதற்கட்ட தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் விஜய் இந்த படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறாராம்.
இவருக்கு ஜோடியாக கதாநாயகிகள் தேர்ந்தெடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. முதலில் நடிகை ஜோதிகாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது ஆனால் விஜய்க்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்பதனால் இதிலிருந்து ஜோதிகா விலகி விட்டதாக கூறப்படுகிறது. இவரைத் தொடர்ந்து பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனை அடுத்து சிம்ரனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது நடிகை சினேகா ஒப்பந்தமாகி இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அப்படி தளபதி 68 படத்தில் சினேகா நடிக்க இருக்கிறாராம் வசீகரா படத்தினை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்-சினேகா இணைந்துள்ளனர்.