மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய புன்னகையரசி சினேகா – ஜோடி யார் தெரியுமா.? பிரபல இயக்குனர்..

sneha

90 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு படங்களில் நடித்து அசத்தியுள்ளார் நடிகை சினேகா. இவர் ஆரம்பத்தில் கிராமத்து கதைகளில் பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்து ஓடிக்கொண்டிருந்த இவருக்கு தொடர்ந்து வெற்றிகள் குவிய. பின் அஜித் விஜய் கமல் தனுஷ் போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தன்னை மென்மேலும் உயர்த்திக் கொண்டார்.

இவரது அழகு திறமையை பார்த்து ரசிகர்களும்  இவரை பின் தொடர்ந்தனர். சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த  சினேகாவுக்கு  பக்கம் வயசு போய்க்கொண்டே இருந்ததால் வேறு வழியின்றி கல்யாண விஷயத்தில் இறங்க ஆரம்பித்தார். இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இப்பொழுது இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக இருந்தாலும் அதிரடியாக உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமா உலகில் நடிக்க ரெடியாக இருக்கிறார் இப்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது. தமிழில் தற்பொழுது  நடிகை சினேகா ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

அச்சமுண்டு அச்சமுண்டு, கல்யாண சமையல் சாதம், நிபுணன் ஆகிய படங்களை இயக்கி வெற்றி கண்ட  இயக்குனர் அருண் வைத்தியநாதன் ஒரு புதிய படத்தை எடுக்கிறார் அந்த படத்திற்கு தற்போது தற்போது சாட் பூட் த்ரீ என பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்தப்படத்தில் பூவையார், கைலாஷ், வேதாந்த், மற்றும் பல சிறுவர்கள் நடிக்கின்றனர்.

shot poot thiri
shot poot thiri

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை சினேகா  ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சினேகாவின் கணவனாக இயக்குனர் வெங்கட்பிரபு நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. படத்தின் ஷூட்டிங் தொடக்கப்பட்டு போய்க் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன இப்பொழுது இந்த படப்பிடிப்பில் இருந்த ஓரிரு புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.