மீண்டும் எகிறிய சினேகா மார்க்கெட்.! ஒரு நாளைக்கு இத்தனை லட்சமா.!

sneha
sneha

இவர் நடித்த காலகட்டத்தில் புன்னகை அரசி என்ற பெயறுடன் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் வெகுவாக கவர்ந்து திரையுலகில் ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை சினேகா. இந்நிலையில் முன்னணி நடிகரான பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்பொழுது இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

சினேகா திருமணத்திற்கு பிறகு பெரிதாக படங்கள் நடிப்பதில் ஆர்வம் செலுத்தாமல் இருந்து வருகிறார். இவர் தற்போது உடல் எடையை குறைத்து மிகவும் அழகாக இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் இவர் மீண்டும் சினிமாவில் நடிக்க போகிறார் என்று கமெண்ட் செய்திருந்தார்.

அந்த வகையில் பல வருடங்களுக்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.பிறகு தெலுங்கிலும் ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் விளம்பரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.இதன் மூலம் இவரின் சம்பளத்தையும் நாளுக்குநாள் உயர்த்திக் கொண்டே இருக்கிறாராம்.

அந்தவகையில் பொதுவாக ஒரு விளம்பரதிற்கு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். இதனை ஒரு படத்தில் குணச்சித்திர நடிகையாக நடிப்பதற்கு ஒரு நாளைக்கு 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை  சம்பளம் வாங்குவதாக செய்திகள் வந்துள்ளன.