39 வயதிலும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் உடலைக் குறைத்து ஸ்லிம்மாக மாறிய சினேகா.! புகைப்படம் இதோ

sneha 3

பொதுவாக நடிகைகள் ஒரு சிலர் திருமணத்திற்குப் பிறகு பெரிதாக சினிமாவில் ஆர்வம் காட்டுவதில்லை.  அந்த வகையில் ஒருவர் தான் நடிகை சினேகா.  இவர் கதாநாயகியாக நடித்து வந்த காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கலக்கி வந்தார்.

அந்த வகையில் ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். சினேகா புன்னகை அரசி என்ற பெயருடன் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.  தற்பொழுது வரையிலும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில மாதங்களிலேயே கர்ப்பமானதால் திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போனது. அந்த வகையில் இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள்.

இந்நிலையில் கடைசியாக தனுஷுடன் இணைந்து பட்டாசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவ்வாறு இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பிறகும் அழகு குறையாமல் மிகவும் ஸ்லிம்மாக இருக்கிறார் சினேகா. அந்தவகையில் இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது மிகவும் ஸ்லிம்மாக அழகாக புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.