நடிகை சினேகா ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் தமிழில் முதன் முதலாக என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து ஆனந்தம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.
பின்பு பார்த்தாலே பரவசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், கிங், ஏப்ரல் மாதத்தில், வசீகரா, பார்த்திபன் கனவு என பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இவர் தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
பின்பு 2012 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர் பிரசன்னா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
நடிகை சினேகா இரண்டாவது குழந்தை பெற்ற பிறகு கொஞ்சம் குண்டாக மாறிவிட்டார். குண்டாக இருந்த சினேகா எப்படியாவது உடல் எடையை குறைத்து விட வேண்டும் என ஒர்க் அவுட் செய்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
ஆனால் என்ன ஆனது தெரியவில்லை மீண்டும் உடல் எடை அதிகரித்து ஆண்டி ரேஞ்சுக்கு மாறிவிட்டார்.
அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.