தமிழ் திரை உலகில் மிகப்பிரபலமான நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் நடிகை சினேகா. இவர் நடித்த கால கட்டத்தில் தன்னுடைய அழகான புன்னகையின் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் புரட்டி எடுத்து விட்டார்.
இவ்வாறு சினிமாவில் பிரபலமாக இருக்கும் பொழுது பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை சினேகா தற்போது குடும்பம் குட்டியாக செட்டிலாகிவிட்டார். அந்த வகையில் தற்போது நமது நடிகை சினேகாவிற்கு ஒரு மகளும் மகனும் உள்ளார்கள்.
பொதுவாக நடிகைகளுக்கு வயது ஆகிவிட்டாலும் சரி திருமணம் ஆகி விட்டாலும் சரி அவர்கள் சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுவது மட்டுமில்லாமல் சினிமா வட்டாரமும் அவர்களை ஒதுக்கி வைத்துவிடும் ஆனால் நடிகை சினேகா திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டார் என நினைத்த நிலையில் உடல் எடையை குறைத்துவிட்டு செம்ம மாஸாக மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்தவகையில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் கூட நடிகை சினேகா நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது குணச்சித்திர வேடங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சினேகா தெலுங்கு திரைப்படத்திலும் தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்ட முன்வந்துள்ளார்.
இது போதாதென்று தற்போது திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார் சினேகா. இந்நிலையில் எங்கு பார்த்தாலும் சினேகாவின் முகம் சிறையில் தெரிவதன் காரணமாக தற்போது காலம் போன காலத்திலும் தனது சம்பளத்தை உயர்த்த கேட்டு வருகிறாராம்.
அந்தவகையில் ஒரு விளம்பர திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லட்சம் வரை சம்பளம் அதேபோல திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடிப்பதற்கு 10 முதல் 15 லட்சம் வரை சம்பளம் கேட்கிறாராம். இது ஒரு பக்கம் இருக்க நடிகை சினேகா சினிமாவிற்கு வந்த புதிதில் நீச்சல் உடையில் புகைப்படம் எடுத்துள்ளார் இவ்வாறு எடுத்த புகைப்படம் ஆனது தற்போது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.