தடுப்பூசி போடும்போது சினேகா செய்த அலப்பறை..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!

sneha
sneha

தமிழ் சினிமாவின் பல்வேறு நடிகர் நடிகைகள் திருமணம் செய்துகொண்டு மிகச் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள் அந்த வகையில் ரஜினி லதா, சூர்யா ஜோதிகா, அஜித் ஷாலினி போன்ற பல்வேறு பிரபலங்கள் சொல்லலாம் அந்த வகையில் ஸ்னேகா பிரசன்னாவும் திரை உலகில் ஜோடிகள் ஆவர்கள்.

இவர்கள் இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப் படத்தின் மூலம்தான் முதன்முதலாக  திரை உலகில் இணைந்தார்கள். பின்னர் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த 2012 ஆம் ஆண்டு சினேகாவும் பிரசன்னாவும் திருமணம் செய்து கொண்டார்கள். இவ்வாறு திருமணத்திற்கு பிறகு விகான் என்ற ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இரண்டாவது குழந்தையை நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது நடிகை சினேகாவிற்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது இவ்வாறு தனக்கு பெண் குழந்தை பிறந்ததை வித்தியாசமான முறையில் பிரசன்னா தைமகள் பிறந்தாள் என்று சமூகவலைத்தள பக்கத்தில்  பதிவிட்டிருந்தார்.

ஆனால் பெண் குழந்தை பிறந்தவுடன் நமது ரசிகர்கள் சும்மா இருப்பார்களா உடனே அவரை குட்டி சினேகா பிறந்துவிட்டார் என வாழ்த்து தெரிவிப்பது மட்டுமில்லாமல் அதனை கொண்டாடியும் வந்தார்கள். மேலும் சினேகாவின் மகளுக்கு  ஆத்யந்தா என பெயர் வைத்துள்ளார்கள் இவர்கள் முதலில் பெண் குழந்தை பிறக்கும் என எண்ணினார்கள் ஆம் ஆனால் அவர்களுடைய எண்ணம் நிறைவேறாமல் ஆண் குழந்தை பிறந்து விட்டது.

இது ஒரு பக்கமிருக்க நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் ஆனது தலைவிரித்து ஆடுவது காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகிறார்கள் இந்நிலையில் நடிகை சினேகாவும் பிரசன்னாவும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள்.

அப்பொழுது சினேகா தடுப்பூசி போடும் பொழுது செய்த சேட்டையை பிரசன்னா எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.