அய்யய்யோ இந்த கதாபாத்திரமா வேண்டவே வேண்டாம் என தெறித்து ஓடிய காஜல் அகர்வால்!!. தில்லாக கமிட்டான சினேகா…

sneha11
sneha11

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா. இவர் தொடர்ந்து சினிமாவில் தனது முழுமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இவர் திருமணத்திற்கு முன்பும் சரி திருமணத்திற்கு பின்பும் இரண்டு குழந்தைக்கு தாயான பின்பும் சரி இதுவரை ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் தனுசுடன் இணைந்து பட்டாசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த நிலையில் இவர் தற்போது தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

தெலுங்கு முன்னணி நடிகரான நடிகர் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து இவருக்கு முன்பே நடிகை கேத்ரின் தெரசா மற்றும் காஜல் அகர்வால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால் இவர்கள் இருவரும் பாலகிருஷ்ணாவிர்க்கு 60 வயது ஆனதை சுட்டிக்காட்டி அவருடன் நடிக்க மறுத்துவிட்டனர். அதே வயதுடைய சிரஞ்சீவியுடன் காஜல் அகர்வால் கைதி 150 என்ற திரைப்படத்தில் நடித்தது அனைவரும் அறிந்ததே.ஆனால் நடிகை சினேகா வயதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அவருடன் நடிக்க ஒப்புக்கொண்டார்.

sneha
sneha