தனது மகன் பிறந்தநாளை நீச்சல் குளத்தில் கொண்டாடிய நடிகை சினேகா.! வைரலாகும் புகைப்படம்..

snega

நடிகை சினேகா தனது மகன் பிறந்தநாளை நீச்சல் குளத்தில் கொண்டாடிய புகைப்படம் உள்ளிட்ட பல புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் அனைத்தும் வைரலாகி வருகிறது. நடிகை சினேகா தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வந்தார். ஒரு கட்டத்திற்கு பிறகு நடிகர் பிரசன்னாவை கடந்த 2012ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் நடிகை சினேகாவின் மகன் விஹான் இன்றைய தனது ஏழாவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.இதனை அடுத்து ஏராளமான புகைப்படங்கள் வெளியான நிலைகள் முக்கியமாக நீச்சல் குளத்தில் மகன் மற்றும் மகளுடன் இருக்கும் ஜாலியான புகைப்படங்கள் ஆகியவை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பிறந்தநாள் பதிவில் சினேகா என் லட்டு, என் செல்லம்,நீ எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியையும்,அன்பையும் அளித்து 7 அழகான ஆண்டுகள் ஆகின்றது எந்த பெற்றோரும் கனவு காணும் குழந்தை நீ, எங்கள் ஆசீர்வாதம் வார்த்தையில் சொல்வதை விட நான் உன் மீது மிகவும் அன்பு செலுத்துகிறேன், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் விஹால் தங்கம்!! என்ற பதிவிட்டுள்ளார் சினேகா.

மேலும் நடிகை சினேகா திருமணத்திற்கு பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு என்ற திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படிப்பட்ட நிலையில் சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஷார்ட் போட் 3’ என்ற தமிழ் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இதனைத் தொடர்ந்து நடிகை சினேகா தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகள் நடுவராக பணியாற்றி வருகிறார்.

snega
snega