ரசிகர்களின் புன்னகை அரசியாக வலம் வந்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் தான் நடிகை சினேகா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து 90 காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பிறகு நடிகர் பிரசாந்தை.காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த டம்மி பட்டாசு திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்ற ஆரம்பித்தார். அந்தவகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திடீரென்று சினேகா கண் கலங்கி அழுதார் ஆனால் அதற்கான காரணங்கள் பலருக்கும் தெரியவில்லை. அதாவது சினேகாவிற்கு சப்ரைஸ் தரும் வகையில் சினேகாவின் அம்மாவை அழைத்து வந்திருந்தார்கள் செட்டில் அவரைப் பார்த்தவுடன் வாயை பொத்தி அசைக்காமல் சில நொடிகள் இருந்த சினேகா திடீரென்று கண்ணீர் சிந்த ஆரம்பித்தார்.
அம்மாவை பார்த்து ஏமோஷனலாகி குழந்தைபோல் ஓடிப்போய் அவரை கட்டி பிடித்து அழ ஆரம்பித்தார். பிறகுதான் தனது இருக்கைக்கு வந்து உட்கார்ந்திருந்தார். சினேகாவின் அம்மா என் பொண்ணு ரொம்ப ஸ்பெஷல், அவள் ஒரு பாசக்காரி, அவள் எனக்கு கடவுள் கொடுத்த வரம், திட்டினாலும் உடனே கோபப்படாமல் ஜாலியாக பேசி என்னையும் மகிழ்ச்சியடைய வைப்பார் என கூறி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.
பிறகு சினேகா அம்மா இந்த மாதிரி எந்த ஒரு ஷோவுக்கும் வர மாட்டாங்க அவருக்கு உடலில் நிறைய பிரச்சனை இருக்கிறது கழுத்து வலி,முதுகு வலி என நிறைய சர்ஜரி பண்ணியிருக்காங்க அம்மா எப்பொழுதுமே என் கூட இருப்பாங்க அம்மா செம்ம க்யூட்டான ஆளு இப்போ கூட டட்டூ போட்டு இருந்தாங்க அப்போ பண்ண முடியாது அனைத்தையும் இப்போது நிறைவேற்றிகிறாங்க. பிறகு எங்க அப்பா துபாய்ல இருந்தாங்க எங்களை மிகவும் பாசமாக பார்த்து கிட்டாங்க என நிறைய விஷயங்களை ஷேர் செய்தார்.