பொதுவாக நடிகைகள் என்றால் தங்களது இளமைப்பருவம் இருக்கும் வரை மட்டும் தான் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகையாகவும் ரசிகர்கள் மத்தியில் மவுசு நிறைந்த நடிகையாகவும் இருக்க முடியும். கொஞ்சம் வயதான பிறகு அவர்களால் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காது.
எனவே ஒரு சிலர் தொடர்ந்து துணை நடிகை மற்றும் குணசித்திர நடிகை போன்ற கேரக்டரில் நடித்து வருவார்கள் இன்னும் சிலர் திரைப்படம் நடிப்பதை நிறுத்தி விடுவார்கள். இப்படிப்பட்ட நிலையில் சில நடிகைகள் மட்டும் வயதானாலும் கூட மிகவும் அழகாக ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில் ஒருவர் தான் நடிகை சினேகா. இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதோடு மட்டுமல்லாமல் இவரின் நடிப்பு திறமை அனைவராலும் பாராட்டப்பட்டது.
தற்பொழுது வரையிலும் இவர் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினேகா தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் தற்போது வரையிலும் பிரபலமடைந்துள்ளார். சினேகாவை தொடர்ந்து குஷ்பு, மீனா போன்ற முன்னணி நடிகைகளும் இருந்து வருகிறார்கள்.
இவ்வாறு புன்னகை அரசி சினேகா தனது அழகு சிரிப்பினாலும், குடும்பத்திற்கான ஏற்றபடி குடும்பப் பெண்ணாக இருந்து வருவதாகவும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக திகழ்கிறார். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித், விஜய், கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இவ்வாறு ஒரு கட்டத்திற்கு மேல் சினிமாவில் புது புது நடிகைகள் அறிமுகமானதால் பல முன்னணி நடிகைகளுக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு குறைந்து வந்தது. அதேபோல் சினேகாவிற்கும் ஒரு கட்டத்திற்குப் பிறகு திரைப்பட நடிப்பதற்கான வாய்ப்பு குறை ஆரம்பித்தது.
இப்படிப்பட்ட நிலையில் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவ்வாறு தற்பொழுது திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் சின்னத்திரையில் நடுவராக பங்கேற்க்க வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு தொடர்ந்து சினேகாவும் நடுவராக பணியாற்றுவதோடு மட்டுமல்லாமல் விளம்பர படங்கள் போன்றவற்றில் நடித்து பணத்தை சம்பாதித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலை சினேகாவிற்கு 40 வயது ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் மவுசு குறையாமல் மிகவும் அழகாக இருந்து வருகிறார்.