தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சினேகா திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் கொஞ்சம் கூட அழகு குறையாமல் மிகவும் இளமையாக இருக்கும் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சினேகா.
இவர் சினிமாவிற்கு அறிமுகமான குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் அந்த வகையில் தொடர்ந்து அஜித், விஜய், ஸ்ரீகாந்த், தனுஷ் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்துள்ளார். பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு சினிமாவில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த இவர் பிறகு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு சமீப காலங்களாக திரைப்படங்களை நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் வித்தியாசமான காஸ்ட்யூமின் இருக்கும் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
மேலும் இவருடைய அழகிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மஞ்சள் நிற உடையில் அழகில் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் உங்களுக்கு கொஞ்சம் கூட குறையவில்லை எனவும் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் கூட சினேகாவின் அழகு கூடிக் கொண்டே இருக்கிறது என ஏராளமான கமெண்ட்களை கூறி வருகிறார்கள்.
இவ்வாறு சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை சினேகா கடைசியாக தனுஷ் நடிப்பில் 2020ஆம் ஆண்டு வெளிவந்த பட்டாசு திரைப்படத்தில் நடித்திருந்தார். பிறகு தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார் விரைவில் நடிகை சினேகா திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.