பொதுவாக சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கலக்கி வந்த பிரபல முன்னணி நடிகர், நடிகைகள் தங்களுக்கு ஓரளவிற்கு வயதாகியதற்க்கு பிறகு தங்களது வாரிசுகளை சினிமாவில் அறிமுகப் படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது சினிமாவில் வாரிசு நடிகர், நடிகைகளின் ஆதிக்கம் தான் அதிக அளவில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு வாரிசு நடிகை தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார். இப்படிப்பட்ட நிலையில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன்,அக்ஷரா ஹாசன், நடிகை மேனகா கீர்த்தி சுரேஷ், நடிகை லிசி மகள் கல்யாணி, நடிகை ராதாவின் மகள்கள் கார்த்திகா, துளசி இவர்களைத் தொடர்ந்து மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி உள்ளிட்ட நீண்ட பட்டியல் உள்ளது.
இவர்களைத் தொடர்ந்து பழம்பெரும் நடிகை ஒருவரின் மகள் தற்பொழுது சினிமாவிற்கு வாரிசு நடிகையாக அறிமுகமாக உள்ளார். ஆம், 1950களில் தமிழ் திரைவுலகில் முன்னணி நட்சத்திரமாக கலக்கி வந்தவர் தான் நடிகை ஜீவிதா. இவர் பழம்பெரும் நடிகையாக இருந்தாலும் தற்பொழுது உள்ள குறிப்பிட்ட ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்.
இவரின் மகளான சிவாத்மிகா தற்பொழுது தமிழ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். வாரிசு நடிகையான இவர் தனது முதல் படத்திலேயே முன்னணி நடிகரான அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
இத்திரைப்படத்தினை ஆர் கார்த்திக் இயக்கவுள்ளார். அதோடு இத்திரைப்படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட திரைப்படமாகும் அந்த வகையில் சிவாத்மிகா தொடர்ந்து மேலும் இரண்டு முன்னணி நடிகைகள் நடிக்க உள்ளார்கள்.

அந்த வகையில் விக்ரமுடன் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்த ரீத்து வர்மா மற்றும் நடிகர் சூர்யாவுடன் சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்திருந்த அபர்ணா பாலமுரளி ஆகியோர்களும் இத்திரைப்படத்தில் நடிக்க உள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் இன்னும் இத்திரைப்படத்திற்க்கான டைட்டில் வெளிவரவில்லை.
இவ்வாறு நட்சத்திர பட்டாளங்கள் ஒன்றில் இணைந்து நடிக்கவுள்தால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகவும் படக்குழுவினர்கள் அறிவித்துள்ளார்கள்.