டான் பட நடிகை சிவாங்கிக்கு இந்த நடிகர் போன்ற காதலர் தான் வேண்டும்.?

விஜய் டிவியில் சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் தனது அழகிய குரல் வளத்தை வெளிப்படுத்தி ஒவ்வொரு சீசனில் இருந்தும் சிலர் சினிமாவில் பாட வாய்ப்பையும் பெற்றுள்ளனர்.

அந்த வகையில் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் சிவாங்கி. பின்பு இவர் குக் வித் கோமாளி என்ற காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்து காணப்பட்டார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சியாகும்.

மேலும் இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலரும் தற்போது சினிமா பிரபலங்கள் மத்தியிலும் பிரபலமடைந்து திரைப்படங்களிலும் நடித்து வருகின்றனர். அந்த வகையில் ரம்யா பாண்டியன், அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ர லட்சுமி போன்ற பலரும் இதன் மூலமே சினிமா பட வாய்ப்பை கைப்பற்றியவர்கள்.

இவர்களைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்து வரும் புகழ், பாலா, சிவாங்கி போன்றவர்கள் கூட சினிமாவில் டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சிவாங்கி சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சிவாங்கியின் நடிப்பு தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

vijay devarkonda
vijay devar konda

இந்த நிலையில் சிவாங்கி தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் ஒவ்வொரு வாரமும் புதிய கெட்டப்பில் களமிறங்கி மக்களை என்டர்டைன்மென்ட் செய்து வருகிறார். மேலும் நேற்று ஒளிபரப்பான குக் வித் கோமாளி எபிசோடில் சிவாங்கி தனது காதலர் எப்படி இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அதற்கு சிவாங்கி எனக்கு விஜய் தேவர்கொண்டா போல காதலர் வேண்டும் எனக் கூறியுள்ளார்.