இந்த வருடம் தொடர்ந்து ஏராளமான திருமணமான பிரபலங்கள் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நடிகை சினேகா மற்றும் பிரசன்னா ஜோடி விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலானது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தன்னுடைய கணவர் பிரசன்னாவுடன் சினேகா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சினேகா விஜய், தனுஷ் போன்ற ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதிலும் முக்கியமாக இவருடைய நடிப்பில் வெளிவந்த ஆனந்தம், பம்பல் கே சம்பந்தம், வசீகரா, புதுப்பேட்டை, ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், பவானி போன்ற திரைப்படங்கள் இவருக்கு சினிமாவில் மிகப்பெரிய ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இவ்வாறு இவருடைய மார்க்கெட் இந்த திரைப்படங்களின் மூலம் உயர்ந்த நிலையில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்தார். இந்நிலையில் நடிகை சினேகா பிரபல நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து அச்சம் உண்டு அச்சம் உண்டு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இதன் மூலம் நட்பாக பேசி வந்த இவர்கள் பிறகு காதலிக்க தொடங்கினார்கள்.
பிறகு தங்களுடைய குடும்பத்தினர்கள் சம்மதத்துடன் 2012ஆம் ஆண்டு மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்து வரும் சினேகா டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். மேலும் சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வருகிறார் அந்த வகையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுசுக்கு ஜோடியாக பட்டாசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தற்பொழுது இந்த தம்பதியினர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ள நிலையில் சினேகா சிறிது காலங்களாக திரைப்படங்கள் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்று வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக நடிகை சினேகா மற்றும் பிரசன்னாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் விவாகரத்து முடிவை கையில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி வந்தது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது தன்னுடைய கணவருடன் மிகவும் ரொமான்டிக்காக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சினேகா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.