சிம்புவுடன் முத்த காட்சி மற்றும் படுக்கையறை காட்சியில் நடித்ததால் சினிமா வாழ்க்கையை தொலைத்த பிரபல நடிகை.! தற்பொழுது அவருடைய நிலை என்ன தெரியுமா.?

SIMBU

ஏராளமான நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் தொடர்ந்து சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானவர் பலர் இருக்கிறார்கள். இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மார்க்கெட் இருந்தும் இவர்கள் செய்தும் சிறு தவறுகளினால் மொத்த மார்க்கெட்டையும் இழந்து விடுகிறார்கள்.

அப்படி நடிகர் சிம்புவால் பிரபல நடிகையின் திரை வாழ்க்கை தொலைந்து போன நிலையில் தற்பொழுது அவருடைய நிலைமை குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தனுஷ் நடிப்பில் கடந்த 2000ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் சுள்ளான். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமாகி முதல் படத்திலேயே பலரையும் கவர்ந்த நடிகை சிந்து துலானி.

இவ்வாறு இந்த படத்தினை தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் பெற்ற மன்மதன் திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் சிந்து துலானி படுக்கை அறை மற்றும் முத்த காட்சிகளில் நடித்த நிலையில் இதன் பிறகு இவருக்கும் தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. எனவே தமிழ் சினிமாவினை விட்டு விட்டு தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க தொடர்ந்தார்.

Sindhu Dulani
Sindhu Dulani

அந்த வகையில் கடைசியாக இவர் 2017ஆம் ஆண்டு வெளியான சித்ராங்கடா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நிலையில் மொத்தமாக சினிமாவை விட்டு விலகிய சிந்து துலானி தற்போது தன்னுடைய குடும்பத்தினர்களுடன் செட்டிலாகி உள்ளார். எனவே மொத்தமாக சினிமாவை விட்டு இவர் விலகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற மொழி படங்களை விட தமிழ் திரைப்படங்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று தந்த நிலையில் இவ்வாறு சிந்து துலானிக்கு தமிழ் திரைப்படங்களில் பட வாய்ப்புகள் கிடைக்காததற்கு முக்கிய காரணம் சிம்புவின் மன்மதன் படம் தான் என கூறப்படுகிறது.