80,90 கால கட்டத்தில் தமிழ் திரைவுலகில் மிகச்சிறந்த நடிகையாக பல இளைஞர்களின் கனவு கண்ணியாக வளம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சிம்ரன்.இவர் தனது சிறந்த நடிப்பு திறமையினாலும், நடனத் திறமையினாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். எனவே ரசிகர்களின் இடுப்பழகி என செல்லமாக அழைக்கப்பட்டார்.
இப்படி சினிமாவில் முன்னணி முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் ரஜினி, கமல்,விஜய்,அஜித் போன்ற முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்த நடித்து வந்தார் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தில் இருந்து வந்த இவரின் மீது பல சர்ச்சைகள் ஏற்பட்டது. மேலும் சிம்ரனுக்கு சில காதல் தோல்விகளும் இருந்திருக்கிறது என்பது சமீபத்தில் வெளியாகிவுள்ளது.
அதாவது சிம்ரன் காதலித்த நான்கு சினிமா ஹீரோக்களை பற்றி தற்பொழுது காண்போம். பொதுவாக சினிமா என்றாலே யார் யாரை வேணாலும் திருமணம் செய்து கொள்ளலாம் காதலித்துக் கொள்ளலாம் அதனை பெற்றோர்கள் கூட பெரிதாக கேட்க மாட்டார்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அந்த வகையில் சிம்ரன் காதலித்த நான்கு ஹீரோக்களை பற்றி பார்க்கலாம்.
ராஜீ சுந்தரம்: இவர் பிரபல நடன இயக்குனரான சுந்தரம் மாஸ்டர் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வாரிசு நடன இயக்குனராக சினிமாவிற்கு அறிமுகமானார் மேலும் ஜீன்ஸ், உன்னாலே உன்னாலே உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அந்த வகையில் இவர் நடிகை சிம்ரனை தீவிரமாக காதலித்தார் என கூறப்படுகிறது.
பிறகு இருவரும் இணைந்து ஐ லவ் யூ டா என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் ராஜசுந்தரத்தின் அப்பாவிற்கு இந்த காதல் பிடிக்காத காரணத்தினால் பாதியிலேயே முறிந்து போனது. மேலும் ராஜசுந்தரம் சிம்ரன் திருமணத்திற்கு பிறகு நடிக்க கூடாது என்பதனால் தான் காதல் முறிந்தது எனவும் தகவல் வெளியானது.
கமல்: தற்பொழுது வரையிலும் இளம் ஹீரோக்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் தான் நடிகர் கமலஹாசன்.உலக நாயகனாக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் பல ஹீரோயின்களுடன் கிசுகிசுப்பில் சிக்கி வந்தார். அந்த வகையில் சிம்ரனுக்கும் கமலஹாசனுக்கும் இருக்கும் உறவைப் பற்றி ஏராளமான வதந்திகள் பரவி வந்தது. அந்த வகையில் இவர்கள் பஞ்சதந்திரம், பம்பல் கே சம்பந்தம் உள்ளிட்ட திரைப்படங்களில் ஜோடியாக நடித்திருந்தார்கள். இவ்வாறு இவர்களைப் பற்றி வதந்திகள் வந்தாலும் இதனைப் பற்றி இருவருமே எந்த ஒரு பதிலும் தரவில்லை.
அப்பாஸ்: சாக்லேட் பாயாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து பிறகு குறிப்பிட்ட காலங்கள் கழித்து சினிமாவில் இருந்து காணாமல் போனவர் தான் நடிகர் அப்பாஸ். சிம்ரன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் நடிகர் அப்பாசுடன் இணைந்து பூச்சூடவா உள்ளிட்ட சில திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். இவர்கள் இருவருமே தீவிரமாக காதலித்து வந்ததாகவும் பிறகு பிரேக் அப் ஆனதாவும் கூறப்படுகிறது.
சரத்குமார்: நடிகை சிம்ரன் மற்றும் சரத்குமார் இருவரும் இணைந்து நட்புக்காக, அரசு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நட்பையும் தாண்டி இருவருக்கும் இடையே ஏதோ ஒரு உறவு இருந்ததாக அப்பொழுது பேசப்பட்டு வந்தது. ஆனால் அந்த உறவை நீடிக்காமல் சிம்ரன் அப்பொழுதே பாதியிலேயே முடித்துக் கொண்டார் எனவும் கூறப்படுகிறது.