Simran Family photo: நடிகை சிம்ரன் தனது குடும்பத்துடன் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடியிருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ய அவரது இரண்டு மகன்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். பொதுவாக சினிமாவில் நடிகைகளை பொருத்தவரை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே அவர்களால் முன்னணி நடிகையாக வலம் வர முடியும்.
குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மார்க்கெட் குறைய உடனே பட வாய்ப்புகளும் பெரிதாக கிடைக்காது. அப்படி 2000ஆம் ஆண்டுகளில் பிரபல நடிகையாக தமிழ் திரைவுலகில் ஜொலித்து வந்த சிம்ரன் கமல், ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சரத்குமார், விஜயகாந்த் என ஏராளமான பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இவ்வாறு படங்களில் நடித்து பிசியாக இருந்து வந்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இவருடைய நடனம் பலரையும் கவர்ந்தது ஒரு கட்டத்திற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் வில்லியாகவும் நடித்து மிரட்டினார்.
இந்த சூழலில் 2003ஆம் ஆண்டு தீபக் பாகா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சமீபத்தில் தனது மகன்கள் மற்றும் கணவருடன் எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகையை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய சிம்ரனின் குடும்ப புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருடைய இரண்டு மகன்களும் நன்கு வளர்ந்து இளைஞர்களாக மாறி உள்ளனர் என்றும் சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகன்களா என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..