தனது இடுப்பை காட்டி ரசிகர்களை கிறங்கடிக்க வைத்த சிம்ரனின் 5 கவர்ச்சி பாடல்கள்.!

simran-1
simran-1

தனது சிறந்த நடிப்பு திறமையினாலும், தனது நடனத்து திறமையினாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை சிம்ரன். இவரின் சிறந்த நடிப்பு திறமையினால் ரசிகர்களின் வரை இடுப்பழகி என அழைத்தார்கள். இவ்வாறு ஒரு கட்டத்திற்கு பிறகு ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிய இவர் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வந்தார்.

அந்த வகையில் கமல்,ரஜினி, அஜித் விஜய் என தற்பொழுது உள்ள பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமடைந்த இவர் ஒரு கட்டத்திற்கு பிறகு வயதான காரணத்தினால் பெரிதாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது இவர் கிடைக்கும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்க்கு அடுத்ததாக நடனம் ஆடுவதில் சிம்ரனை அடித்த ஆளே கிடையாது. இவர் கவர்ச்சி நடனமும் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் சிம்ரன் நடனமாடி இளசுகளை கிரங்கடித்த ஐந்து கவர்ச்சி பாடல்களை தற்போது பார்க்கலாம்.

எதிரும் புதிரும்: தரணி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் எதிரும் புதிரும் இத்திரைப்படத்தில் வித்தியாசாகர் இசையில், வைரமுத்து வரிகளில், புஷ்பவனம் குப்புசாமி மற்றும் ஸ்வர்ணலதா குரலில் வெளியான ‘தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா  என்ற பாடலில் நடிகை சிம்ரன் தன சிறந்த கவர்ச்சி நடன திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

வாலி: நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்த அசத்தியிருந்த திரைப்படம் தான் வாலி. இந்தத் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘நிலவைக் கொண்டு வா, கட்டில் கட்டி வை’ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்தப் பாடலை தேவா இசையமைக்க வைரமுத்து வரிகள் எழுதி இருந்தார். இந்த படம் மற்றும் பாடல் இரண்டும் அப்போதே மிகப்பெரிய ஹிட் அடித்தது.

அவள் வருவாளா: இரண்டாவது முறையாக அஜித் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்த திரைப்படம் தான் அவன் வருவாளா இப்படத்திற்கு எஸ் ஏ ராம்குமார் இசை அமைத்திருந்தார். மேலும் பழனி பாரதி வரிகளில் உன்னிகிருஷ்ணன், சித்ரா குரலில் வெளியான ‘சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க’ இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

பூச்சூடவா: அப்பாஸ் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளிவந்து ஹிட் பெற்ற திரைப்படம் தான் பூச்சூடவா. இத்திரைப்படத்தில் சிற்பி இசையில் எஸ்பிபி பாலசுப்ரமணியன் மற்றும் சித்ரா குரலில் வெளியான ‘காதல் காதல் காதல் என் கண்ணில் மின்னல் மோதல்’ என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனமாடியிருந்தார் சிம்ரன்.

நியூ: இத்திரைப்படத்தில் ஏஆர் ரகுமான் இசையமைக்க வாலி வரிகளில் உருவான ‘ஸ்பைடர் மேன்’என்ற பாடலுக்கு சிம்ரன் மற்றும் எஸ்கே சூர்யா இருவரும் இணைந்து நடனமாடியிருந்தார்கள் மேலும் இத்திரைப்படத்தினை எஸ்கே சூர்யா இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.