பொதுவாக நடிகைகள் என்றால் தங்களது இளமை குறையும் வரை மட்டும் தான் அவர்களால் முன்னணி நடிகைகளாக வலம் வர முடியும். அதன் பிறகு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் மட்டும்தான் அவர்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கும்.
அந்தவகையில் 90 காலகட்டத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்துப் போட்டவர் நடிகை சிம்ரன். இவர் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இவ்வாறு சோலோ ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருந்த இவரின் இடுப்பு அழகை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களை கிறங்கடித்தார். அதிலிருந்து இவரை இடுப்பழகி சிம்ரன் என்று கூறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட புகழின் உச்சத்தில் இருந்து வந்த இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு குழந்தையும் பிறந்தது. அதன் பிறகு இவர் மீண்டும் சினிமாவிற்கு நடிக்க வந்தாலும் பெரிதாக சொல்லும் அளவிற்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் ரஜினியுடன் இணைந்து ரஜினிக்கு ஜோடியாக பல வருடங்கள் கழித்து பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது வில்லி கதாபாத்திரத்திலும், சின்ன சின்ன ரோலில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் நடிகர் பிரசாந்த் உடன் இணைந்து ஹிந்தி பட ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் 2013ஆம் ஆண்டு சின்னத்திரையிலும் சீரியலில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் புதுயுகம் சீரியலில் ஒளிபரப்பாகி வந்த அக்னி பறவை என்ற சீரியலில் நடித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.