80, 90 காலகட்டங்களில் பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர்களை பற்றி பெரிதும் பேசுகிறோம்.. ஆனால் அதே சமயத்தில் அந்த காலக்கடத்தில் நடிகைகளில் உச்சத்தை தொட்டுவர் நடிகை சில்க் ஸ்மிதா. ஆனால் இவரைப் பற்றி தற்பொழுது யாரும் பேசுவதில்லை.
பல படங்களில் கிளாமராக நடித்தாலும் இவரது நடிப்பு தனித்துவமாக இருந்துவந்தது. பெரும்பாலும் நடிகைகள் ஒரு காட்சி எடுக்க படாதபாடு படுவார்கள் ஆனால் சில்க் ஸ்மிதா ஒரு காட்சியை அசால்டாக அதுவும் ஒரே டேக்கில் நடித்துக் கொடுத்து அசத்துவார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
மேலும் கண்களால் பேசி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வளைத்து போட்டார். பல இளம் நடிகர்களின் படங்களுக்கு குத்து டான்ஸ் ஆடி வெற்றிப்படமாக மாற்றியவர் நடிகை சில்க் ஸ்மிதா.
இப்படி சினிமாவில் நல்லது கெட்டது என எல்லாவற்றையும் பார்த்து வந்த சில்க் ஸ்மிதா ஒரு கட்டத்தில் திடீரென மர்மமான முறையில் இறந்தார்.
இன்றுவரை இறந்தர்க்கான காரணம் தெரியாமல் மறைமுகமாகவே இருக்கிறது.
சில்க்ஸ்மிதா தமிழையும் தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார் இவர் இதுவரை 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக 80, 90களில் வலம் வந்தார்.
இவர் சினிமாவில் வருவதற்கு முக்கியமான காரணமாக அமைந்தவர் பிரபல நடிகர் “வினு சக்கரவர்த்தி” என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இல்லை என்றால் சில்க் ஸ்மிதா சினிமாவில் அடி எடுத்து இருக்க கூடிய வாய்ப்பே இல்லை என தெரிய வருகிறது.
வினுசக்ரவர்த்தி சில்க் சுமிதாவை வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் அறிமுகம் செய்தார்.
அதன்பின் வினுசக்கரவர்த்தி மனைவி ஆங்கிலம் நடனம் கற்க சில பயிற்சியாளர்களை ஏற்பாடு செய்திருந்தார் அவர்களில் ஒருவராக சில்க்ஸ்மிதா உதவி செய்யவே பின்னாட்களில் அவருக்கு சினிமாவில் பல பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கப்பட்டது.
அதை சரியாக பிடித்து மிகப்பெரிய நாயகியாக அசுர வளர்ச்சியை கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.