தமிழ் சினிமாவிற்கு வாரிசு நடிகையாக அறிமுகமாகி தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சுருதிஹாசன். தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கமலஹாசன் அவர்களின் மூத்த மகள் தான் நடிகை சுருதிஹாசன். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமாகி பிறகு தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இவருடைய முதல் திரைப்படமே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று தந்தது இதனை அடுத்து சூர்யா நடிப்பில் வெளிவந்த 7ம் அறிவு திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வந்தது.
இதன் மூலம் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற இவருக்கு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வந்த நிலையில் சமீப காலங்களாக இவருக்கு பெரிதாக தமிழில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை எனவே ஸ்ருதிஹாசன் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்த வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் அங்கு இருக்கும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்துவரும் நிலையில் தன்னுடைய அப்பா வயதை எட்டியிருக்கும் நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு தான் கிடைத்து வருகிறது. எனவே அவருடைய படத்தில் இணைந்து நடித்து வருவதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தெலுங்கு சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் 62 வயதான பாலகிருஷ்ணன் உடன் இணைந்து வீரசிமா ரெட்டி படத்தில் நடித்துள்ளார்.
இதனை அடுத்து 67 வயதான மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்களுடன் இணைந்து வால்டர் வீரய்யா படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சிரஞ்சீவியின் ஸ்ரீதேவி என்ற பாடலும், பாலகிருஷ்ணனின் சுகுனா சுந்தரி என்ற பாடலும் வெளியாகி உள்ளது இவ்வாறு தன்னுடைய அப்பா வயது இருக்கும் நடிகர்களுடன் இணைந்து ரொமாண்டிக்காக நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.