ஹீரோவுக்கு மட்டும் உடை.. எனக்கு இதுவா.? இயக்குனர்களுக்கு கோரிக்கை வைத்த நடிகை ஸ்ருதிஹாசன்

shruthi-haasan-
shruthi-haasan-

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருவர் நடிகை சஸ்ருதிஹாசன் இவர் தமிழில் சூர்யாவின் ஏழாம் அறிவு என்னும் படத்தில் நடித்து  அறிமுகமானார் அதனை தொடர்ந்து தமிழில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும்  விஜயின் புலி, அஜித்தின் வேதாளம் பூஜை என அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்த..

இவர் சமீபாகாலமாக தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி நடிக்கிறார் அங்கு கிளாமர் மற்றும் திறமையை காட்டி நடிப்பதால் அவருக்கு நான் தனி ரசிகர்கள் பட்டாலும் இருப்பதோடு மட்டுமல்லாமல் அவருக்கான வெற்றி சதவீதம் அங்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் பட வாய்ப்புகளும் எக்கச்சக்கமாக குவிக்கின்றன. இதனால் சந்தோஷமாக ஸ்ருதிஹாசன் அங்கு நடித்து வருகிறார்.

கடந்த பொங்கலுக்கு கூட இவர் நடிப்பில் வெளியான இரண்டு திரைப்படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் நடித்து ஓடிக்கொண்டிருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால்.. ஹீரோயின்களை  snow ல் டான்ஸ் ஆட சொல்கிறார்கள் எனக்கு  snow வில் ஆட பிடிக்காது ஹீரோ மட்டும் உடை அணிந்து கொள்ளலாம் ஆனால் நான் சேலை மற்றும் பிளவுஸ் மட்டும் அணிந்து கொண்டு ஆட வேண்டும்..

shruthi-haasan-
shruthi-haasan-

இதை தயவு செய்து நிறுத்துங்கள் என இயக்குனர்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் சுருதிஹாசன். கடந்த பொங்கலை முன்னிட்டு ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த வால்டர் வீரய்யா திரைப்படத்தில் கூட ஸ்ருதிஹாசன் snow வில் நடனம் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் பேசும் பொருளாக தற்போது மாறியிருக்கிறது.