நடிகை சுருதிஹாசனுக்கு இப்படி ஒரு நோயா..? கல்யாணம் வேணாம்னு சொல்ல இதுதான் காரணமோ..?

shruthihasan-00
shruthihasan-00

நடிகை சுருதிஹாசன் அவர்கள் உலகநாயகனின் மூத்த மகள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் சுருதிஹாசன் அவர்கள் தன்னுடைய சிறந்த இசையின் மூலம் தான் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார் அதன் பிறகு தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக கால் தரம் பதித்தார்.

நடிகை சுருதிஹாசன் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாகவே தனக்கென ஒரு மாபெரும் குழுவை அமைத்துக் கொண்டு பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் தன்னுடைய இனிமையான குரலில் மூலமாக ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.

சமீபத்தில் வைரஸ் தொற்று காரணமாக மும்பையிலேயே செட்டில் ஆகிய நடிகை சுருதிஹாசன் அவர்கள் அடிக்கடி சமையல் செய்யும் வீடியோ மற்றும் போட்டோ சூட்  போன்றவற்றில் அதிக அளவு கவனம் செலுத்துவது மட்டுமில்லாமல் அவருடைய செல்ல பூனையுடன் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் நடிகை சுருதிஹாசனுக்கு ஒரு மிகப்பெரிய நோய் உள்ளதாக சமூக வலைதள பக்கத்தில் பரவி வருகிறது என் நிலையில் அவற்றைப் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது அதாவது நடிகை சுருதிஹாசனுக்கு பீசிஓ எஸ் மற்றும் எண்டோமெட்ரிசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அதாவது இவை மோசமான ஹார்மோன் பிரச்சனை ஆகும் என் நிலையில் தன்னுடைய உடல்நிலை தற்பொழுது சரியாக இல்லை ஆனால் என்னுடைய இதயம் மிகவும் பலமாக இருக்கிறது என்று ஸ்ருதி தெரிவித்தது மட்டுமில்லாமல் நான் கூறுவது அதிக பிரசங்கி தனமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறு எனக்கு ஏற்பட்டதை உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவிப்பது மட்டுமில்லாமல் கடுமையான உடற்பயிற்சி செய்தியும் வீடியோ ஒன்றையும் பதிவிட்டு உள்ளார்.