உலக புகழ் பெற்ற அந்த நடிகர் மீது தான் கிரஷ் – நடிகை ஸ்ருதிஹாசன் பேச்சால் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

shruthi-haasan
shruthi-haasan

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன் முதலில் இவர் சூர்யா நடிப்பில் உருவான ஏழாம் அறிவு திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார். முதல் படமே வெற்றி படமாக மாறியதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது.

அந்த வகையில் அஜித்தின் வேதாளம், விஜயின் புலி, விஷாலின் பூஜை, சூர்யாவின் சிங்கம் 3 என அடுத்தடுத்த டாப் ஹீரோ படங்களில் தொடர்ந்து நடித்து வெற்றிகளை குவித்தார் ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்தார். குறிப்பாக தெலுங்கில் இவர் நடித்த ஒவ்வொரு படமே வெற்றி படம்தான்..

கடைசியாக கூட இவர் வீரசிங்க ரெட்டி, வால்டர் வீரய்யா போன்ற படங்கள் பெரிய வெற்றியை பதிவு செய்தது இப்பொழுது கூட கைவசம் பிரபாஸுடன் சாலர், ஹோலிவுட்டில் the eye என்னும் படத்திலும் நடித்து வருகிறார். இப்படி ஓடுவதால் நடிகை ஸ்ருதிஹாசனின் சினிமா மார்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது.  அவ்வபொழுது கிசுகிசுக்கவும் சிக்கி கொள்கிறார்.

ஆனால் அதை எல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் சினிமாவில் நடிப்பது மீதி நேரங்களில் சோசியல் மீடியாவில் படும் ஆக்டிவாக இருந்து வருகிறார் நடிகை  சுருதிஹாசன் இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு பிடித்த நடிகர் யார் என்பது குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்.

shruthi haasan
shruthi haasan

தமிழ், தெலுங்கு போன்ற மொழி பக்கங்களில் பல நடிகர்களுடன் நடித்திருந்தாலும் நடிகை சுருதிஹாசனுக்கு பிடித்தது என்னவோ நடிகர் புரூஸ் லீ தான் முதல் க்ரிஷ் வந்ததாக அவர் கூறியிருக்கிறார் இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.