பாவாடை தாவணியில் இளசுகளின் மனதை குளிர வைத்த நடிகை சிருஷ்டி டாங்கே.. வைரலாகும் புகைப்படம.!

திறமை இருப்பவர்கள் எங்கு வேண்டுமானாலும் ஜொலிக்க முடியும்.. அந்த வகையில் மும்பை பெண்ணான சிருஷ்டி டாங்கே தமிழில் யுத்தம் செய்ய என்னும் திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்த அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து சிறு இடைவேளைக்கு பிறகு மேகா..

படத்தில் ஹீரோயின்னாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதன் பின் டார்லிங், எனக்குள் ஒருவன், நேருக்கு நேர், கத்துக்குட்டி, புரியாத ஆனந்தம் புதிய ஆரம்பம், வில் அம்பு அனைத்து படங்களும் இவருக்கு பெரும் வெற்றியை தான் பெற்று தந்தன. ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் பிற மொழிகளில் கவனம் செலுத்தினார்.

இதனால் தமிழ் சினிமாவில் இவருடைய மார்க்கெட் குறைய தொடங்கியது.  மேலும் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை இதனால் சின்னத்திரை பக்கம் இவர் களம் இறங்கினார் அதன்படி சர்வைவர், குக் வித் கோமாளி சீசன் 4 போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அசத்தினார்.

இப்படி ஓடினாலும் பட வாய்ப்புக்காக தான்  அவர் தினமும் எங்கிக் கொண்டு இருக்கிறார் கிடைக்காததால் வேறு வழி இன்றி வாய்ப்பை பெற..  மற்ற நடிகைகள் போல இவரும் சோசியல் மீடியாவில் நம் எதிர்பார்க்காத கிளாமர் மற்றும் க்யூட்டான புகைப்படங்களை அள்ளி வீசி வந்து கொண்டு தான் இருக்கிறார்.

அதுபோல தற்போது நடிகை சிருஷ்டி டாங்கே  பாவாடை தாவணியில் தனது அழகைக் காட்டி விதவிதமாக இவர் எடுத்துக் கொண்டார் புகைப்படம் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் லைக் மற்றும் கமெண்டுகளை பெற்று வருகிறது. இதோ நடிகை  சிருஷ்டி டாங்கே செம்ம அழகாக இருக்கும் அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

shruti-dange
shruti-dange

Leave a Comment

Exit mobile version