actress shruthihasan anchoring latest program: தமிழ் திரை உலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் பல்வேறு பெரிய படங்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்து மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.
இவ்வாறு இதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகையாக வருவார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் அவர் வேற்று மொழிகளில் திரைப்படங்கள் நடிக்க சென்றுவிட்டார். இதனால் தற்போது தமிழ் சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்து வரும் நமது சுருதிஹாசன் தற்போது கமலஹாசனுக்கு போட்டியாக பிரபல நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்ற உள்ளாராம்.
பொதுவாக கமலஹாசன் சினிமாவில் எவ்வளவு பிரபலம் ஆனாரோ அதைவிட விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மிகவும் பிரபலம் அடைந்தார். இவ்வாறு இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவதன் காரணமாக அவருக்காகவே ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை விருந்து பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
புலிக்கு பிறந்தது பூனையாகுமா அதேபோலதான் நடிகை ஸ்ருதிஹாசனும் கமலஹாசன் போல அதிக திறன் உடையவர். அந்த வகையில் இவர் கமலஹாசனை போலவே பாடல் பாடுவது நடனம் ஆடுவது மட்டுமல்லாமல் இவர் மியூசிக் மற்றும் தயாரிப்பு போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது மிகப் பிரபலமான நடிகையாக வலம் வரும் நடிகை ஸ்ருதிஹாசன் அமேசான் தளத்தில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.
நடிகை சுருதிஹாசன் ஏற்கனவே சன் டிவி ஹலோ சகோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மூலமாக ரசிகர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.